ட்ரெண்டிங்

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024’ தொடங்கியது!

 

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024 சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (ஜன.07) தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று (ஜன.07) காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தமிழ்நாடு அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தங்கம் தென்னரசு மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

 

அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தொழிலதிபர்கள் சிறப்புரையாற்றினர். பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நிறுவனத்திற்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையே தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

 

குறிப்பாக, ஹூண்டாய், டாடா, ஜியோ ரிலையன்ஸ், பெகட்ரான், டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஆலைகளைத் தொடங்கவும், ஆலைகளை விரிவாக்கம் செய்யவும் முதலீடு செய்துள்ளனர்.