ட்ரெண்டிங்

கபில் சிபலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! 

உச்சநீதிமன்ற பார் அசோசியேஷனின் தலைவராகத் தேர்வான சமாஜ்வாதி கட்சியின் மூத்த நிர்வாகியும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபலுக்கு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், கபில் சிபலின் வெற்றி பார் அசோசியேஷன் சுதந்திரமாகச் செயல்படுவதை உறுதிச் செய்யும். கபில் சிபல் வெற்றி அரசியலமைப்பு சட்ட விழுமியங்கள் பாதுகாப்பான கைகளில் இருப்பதை உறுதிச் செய்கிறது. மக்கள் போற்றும் நீதி மற்றும் ஜனநாயகக் கொள்கைகள் கபில் சிபல் தலைமையில் நிலை நிறுத்தப்படும் என நம்பிக்கை கொண்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.