ட்ரெண்டிங்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 86 நாட்களுக்கு பின் சரிவு!

 

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 86 நாட்களுக்கு பின் மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது.

 

இன்று (ஜன.04) காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 752 கனஅடியில் இருந்து 544 கனஅடியாகக் குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 71.27 அடியில் இருந்து 71.25 அடியாகக் குறைந்துள்ள நிலையில், நீர் இருப்பு 33.78 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காகத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 600 கனஅடியாக உள்ளது.

 

தமிழகம்- கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்துக் குறைந்துக் காணப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 86 நாட்களுக்கு பின் மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது.