ட்ரெண்டிங்

எடப்பாடி பழனிசாமி, மோடி மீது அமைச்சர் உதயநிதி கடும் விமர்சனம்! 

சேலம் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியின் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து தி.மு.க.வின் இளைஞரணியின் செயலாளரும், முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேலம் குரங்குச்சாவடி பகுதியில் இன்று (ஏப்ரல் 09) காலை 10.00 மணிக்கு தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தியா கூட்டணி அரசு அமைந்ததும் சிலிண்டர் விலை ரூபாய் 500 ஆக குறைக்கப்படும்; தேர்தலுக்காக மோடி அரசு சிலிண்டர் விலை குறைப்பு நாடகம். தவழ்ந்து சென்று முதலமைச்சர் பதவிக்கு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கு மக்களுக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சேலம் கருப்பூரில் டைடல் பார்க் அமைக்கப்படும்; ரூபாய் 548 கோடி மதிப்பீட்டில் சேலத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம் பழைய பேருந்து நிலையத்தில் ரூபாய் 98 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள்; சேலத்தில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார். 

அதேபோல், சேலம் மாவட்டத்தில் 6 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.