ட்ரெண்டிங்

கோவை- பாட்னா சிறப்பு ரயில் அறிவிப்பு! 

கோவை- பாட்னா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று (மார்ச் 22) கோவையில் இருந்து பாட்னாவிற்கும், மறுமார்க்கத்தில், மார்ச் 27- ஆம் தேதி பாட்னாவில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்கள், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், விஜயவாடா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.