ட்ரெண்டிங்

அமைச்சர்கள் ஆர்.காந்தி, ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு!

அமைச்சர் ஆர்.காந்தி, ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் துறைகளை ஒதுக்கீடு செய்ய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிலையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அவர் தனது அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். இதையடுத்து, பொன்முடி வகித்து வந்த இலாகாக்களை மாற்ற அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்க, ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை, அறிவியல் தொழில்நுட்பத்துறையைக் கூடுதலாக ஒதுக்கீடு செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல், ராஜகண்ணப்பன் வசம் இருந்து வந்த கதர் மற்றும் கிராமத் தொழில் துறை, கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஆர்.காந்திக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
[5:10 pm, 21/12/2023] Santhosh Web JNS 1: சபரிமலை சீசன்- சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சபரிமலை சீசனைத் தொடர்ந்து, பக்தர்களின் வசதிக்காக, சேலம் வழியாகச் செல்லும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சபரிமலை சீசனைத் தொடர்ந்து, பக்தர்களின் வசதிக்காக சென்னை எழும்பூர்- கொல்லம் இடையே இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 22, 24 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கும், டிசம்பர் 23, 25 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து எழும்பூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.