சென்னையில் இருந்து கோவைக்கு வாரந்திர சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பண்டிகைக் கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, பயணிகளின் வசதிக்காக, சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு வாராந்திர சிறப்பு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த வந்தே பாரத் ரயில் வரும் ஜனவரி 30- ஆம் தேதி வரை இயக்கப்படும்.
சென்னையில் சென்ட்ரலில் இருந்து காலை 07.00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், மதியம் 02.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தைச் சென்றடையும். கோவையில் இருந்து பிற்பகல் 03.05 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், இரவு 09.50 மணிக்கு சென்னை சென்ட்ரலைச் சென்றடையும். இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
இந்த சிறப்பு வந்தே பாரத் ரயிலில் எட்டு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



-hcTFAGMRGb.jpg)