ட்ரெண்டிங்

சேலம் தொகுதியின் வளர்ச்சிக்காக அ.தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை- எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. குற

 

சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலத்தில் 4,5,6,7,8,12,13,14,15,16,17,29,31,32 ஆகிய 14 வார்டுகளில் நடைபெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் முகாமில் கலந்து கொண்ட சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

 

முகாமில் பேசிய எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன்,40 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்து, மக்கள் சேவை செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளீர்கள். நான் நாடாளுமன்றத்திற்கு சென்று உங்கள் குரலாக, தொகுதி வளர்ச்சிக்காக பல்வேறு முறை பேசியிருக்கிறேன்.

 

மத்திய அரசிடம் கோடிக்கணக்கான ரூபாய் பெறப்பட்டு,தொகுதியில் வளர்ச்சிக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக, தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 5,750 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றனர். முடிவுற்ற திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

 

எனக்கு முன்பாக, அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் எம்.பி.க்களாகப் பணியாற்றி உள்ளனர். ஏதாவது இரண்டு முன்னாள் அ.தி.மு.க. எம்.பி.க்களின் பெயர்களை உங்களால் சொல்ல முடியுமா? அப்படி முடிந்தால் சொல்லுங்கள் உங்களுக்கு ரூபாய் 500, 1000 வழங்குகிறேன். மக்களைச் சந்திக்காத ஒரு கட்சி அ.தி.மு.க. அடிப்படை பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காத இயக்கம் அ.தி.மு.க. கடந்த 10 ஆண்டுகளில் சேலம் மக்களவைத் தொகுதியின் வளர்ச்சிக்காக அ.தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.