ட்ரெண்டிங்

சாம்பல்பூர்- ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் சேவைகள் நீட்டிப்பு!

 

சாம்பல்பூர்- ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

 

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, சாம்பல்பூர்- ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாம்பல்பூர்- ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் சேவைகள் வரும் பிப்ரவரி 28- ஆம் தேதி வரையும், ஈரோடு- சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் சேவைகள் வரும் மார்ச் 01- ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ரயில்கள், விஜயவாடா, பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். வாரத்தில் புதன்கிழமை அன்று சாம்பல்பூரில் இருந்தும், வெள்ளிக்கிழமை அன்று ஈரோட்டில் இருந்தும் இந்த வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.