ட்ரெண்டிங்

சேலம் டவுன் ரயில் நிலையத்தில் இனி இந்த ரயில் நிற்காது!

 

புதுச்சேரி- மங்களூரு இடையே இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள், சேலம் டவுன் ரயில் நிலையத்தில் இனி நிற்காது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுச்சேரி- மங்களூரு சென்ட்ரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16855) ரயிலும், மங்களூரு சென்ட்ரல்- புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16856) ரயிலும் சேலம் டவுன் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது.

வரும் டிசம்பர் 21- ஆம் தேதி முதல் புதுச்சேரி- மங்களூரு சென்ட்ரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலும், டிசம்பர் 22- ஆம் தேதி முதல் மங்களூரு சென்ட்ரல்- புதுச்சேரி  வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலும் சேலம் டவுன் ரயில் நிலையத்தில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .