ட்ரெண்டிங்

ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை வழங்கிய மேச்சேரி ஊராட்சி!

 

சேலம் மாவட்டம், மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

 

மிக்ஜாம் புயல் தாக்கத்தால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள், உணவு, தங்குமிடம், மருத்துவம் என அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். புயல் கரையைக் கடந்து இரண்டு நாட்கள் ஆகியும், மழைநீர் வடியாததால், தமிழகம் முழுவதிலும் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்படுகின்றன.

 

அதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்டம், மேச்சேரி ஊராட்சி ஒன்றியம் சார்பாக, தண்ணீர் பாட்டில்கள், கோரை பாய்கள், பிஸ்கெட்டுகள், போர்வைகள், துண்டுகள் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் ஒப்படைத்தனர்.