ட்ரெண்டிங்

சேலம் வழியாக கோவைக்கு செல்லும் முக்கிய ரயில்கள் ரத்து!

 

சேலம் வழியாக கோவைக்கு செல்லும் பல முக்கிய ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெய்த கனமழை, அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கோவை- சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12244), கோவை- சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12676), மங்களூரு சென்ட்ரல்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 16160), மங்களூரு சென்ட்ரல்- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12686), போடிநாயக்கனூர்- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 20602), மேட்டுப்பாளையம்- சென்னை சென்ட்ரல் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12672), சென்னை சென்ட்ரல்- மங்களூரு சென்ட்ரல் மெயில் (ரயில் எண் 12601) ஆகிய ரயில் சேவைகள் இன்று (டிச.07) ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த ரயில்கள் அனைத்தும் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படக் கூடியது. ரத்துச் செய்யப்பட்ட ரயில்களில் பயணிக்க முன்பதிவுச் செய்வதற்களுக்கு முழு தொகையும் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.