ட்ரெண்டிங்

மருத்துவ விடுப்பில் சென்ற பெரியார் பல்கலை. பதிவாளர்!

பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேலு மருத்துவ விடுப்பில் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சர்ச்சைக்கு பெயர்போன சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான புகார்கள் தமிழகத்தை அதிர செய்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் நிர்வாகக் கட்டமைப்பு பலவீனமாக இருக்கும் ஒரே பல்கலைக்கழகம் என்றால் அது பெரியார் பல்கலைக்கழகம் தான். 

இந்த சூழலில், நிதிமுறைகேடு, ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்குள்ளான பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்ய தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பரிந்துரைச் செய்திருந்தது. 

பரிந்துரையைச் செயல்படுத்த துணைவேந்தர் காலதாமதம் செய்த நிலையில், பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலு இன்று (பிப்.13) தனக்கு முதுகுவலி என்பதால் மருத்துவ விடுப்பை எடுத்துக் கொண்டுள்ளார். பதிவாளர் இம்மாதம் இறுதியில் ஓய்வுப் பெறவுள்ள நிலையில், சஸ்பெண்ட்டை காலம் தாழ்த்தும் வகையில் அவர் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.