ட்ரெண்டிங்

சேலம் வழியாக செல்லும் 3 ரயில்கள் ரத்து!

 

சேலம் வழியாக செல்லும் மூன்று முக்கிய ரயில் சேவைகளை இன்று (டிச.06) தெற்கு ரயில்வே ரத்துச் செய்துள்ளது.

 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையில் பெய்த தொடர் கனமழையால் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஆலப்புழா- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 22640), திருவனந்தபுரம்- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12696), திருவனந்தபுரம்- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 22208) ஆகிய மூன்று ரயில் சேவைகள் இன்று (டிச.06) ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

 

ரத்துச் செய்யப்பட்டுள்ள ரயில்களில் பயணிக்க முன்பதிவுச் செய்த பயணிகளுக்கு டிக்கெட் தொகை முழுமையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.