உலக சாதனை படைக்கவே தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று தேர்தல் மன்னன் பத்மராஜன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த தேர்தல் மன்னன் என்றழைக்கப்படும் பத்மராஜன், தருமபுரி மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். ANI செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இதுவரை 239 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளேன். தோல்வியை மட்டுமே விரும்பினேன். உலக சாதனை படைக்கவே தேர்தலில் போட்டியிடுகிறேன். ஒரே தேர்தலில் அதிகபட்சமாக 6,000 வாக்குகளைப் பெற்றுள்ளேன்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க.வின் ஜெயலலிதா, பி.எஸ்.எடியூரப்பா ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டேன். தேர்தலில் வெற்றி பெற விரும்பவில்லை, தோல்வியை மட்டுமே விரும்புகிறேன். 1988- ல் இருந்து தேர்தல் வேட்புமனுத்தாக்கல் செய்ய ஒரு கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்துள்ளேன்.
எனது இடத்திற்கு அருகில் சிறிய பஞ்சர் கடை நடத்தி சம்பாதிக்கிறேன்.அதில் கிடைக்கும் வருமானத்தில் இந்த டெபாசிட் தொகையை செலுத்துகிறேன். குடியரசுத் தலைவர் தேர்தல், மாநகராட்சி, வார்டு தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளேன். வரும் தேர்தல்களிலும் போட்டியிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.


-SXgDfGgJfO.jpg)