ட்ரெண்டிங்

சேலம் வழியாக செல்லும் 10- க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து!

 

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடும் பாதிப்பை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் சந்தித்துள்ளது. நீர்நிலைகள் நிரம்பி, கரைகள் உடைத்து வெளியேறிய நீரால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ளது. அதேபோல், ரயில்வே தண்டவாளங்களும் மூழ்கியுள்ள காரணத்தால், இன்று (டிச.05) மட்டும் சேலம் வழியாகச் செல்லும் 10- க்கும் மேற்பட்ட ரயில்களை தெற்கு ரயில்வே ரத்துச் செய்துள்ளது.

 

அதன்படி, கோவை- சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 20644), கோவை- சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12680), எர்ணாகுளம்- பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 22643), சென்னை சென்ட்ரல்- கோவை வந்தே பாரத் சிறப்பு ரயில் (ரயில் எண் 06035), சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 20643), சென்னை சென்ட்ரல்- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12679), சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12695), சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 22207), சென்னை சென்ட்ரல்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 22639), சென்னை சென்ட்ரல்- மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12671) உள்ளிட்ட ரயில் சேவைகளை இன்று (டிச.05) ரத்துச் செய்துள்ளது.

 

ரத்து செய்யப்பட்ட ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவுச் செய்தவர்களுக்கு முழுத்தொகையும் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.