ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் நாளை விரிவான மருத்துவக் காப்பீடு முகாம்!

 

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் சிறப்புக் காப்பீட்டுத் திட்டப் பதிவு முகாம் நாளை (டிச.02) நடைபெறவுள்ளது.

 

இதுகுறித்து இணை இயக்குநர் (நலப்பணிகள்) மருத்துவர் பானுமதி தெரிவித்துள்ளதாவது, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 100 சிறப்பு காப்பீட்டுத் திட்டப் பதிவு முகாம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அம்மாப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நாளை (டிச.02) காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை சிறப்பு காப்பீட்டுத் திட்ட பதிவு முகாம்கள் நடைபெறுகிறது.

 

இதுவரை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை பெறாதவர்கள், இம்முகாமில் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளின் அசல் மற்றும் நகல் ஆகியவற்றைக் கொண்டு நேரடியாக முகாம் நடைபெறும் இடத்தில் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.