ஆன்மிகம்

நெருங்கும் ஆடித் திருவிழா- ரெடியாகும் சேலம்! 

சேலம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மாம்பழம். அதற்கடுத்து ஆடித் திருவிழா. குறிப்பாக, வருடத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மிகப்பெரிய திருவிழா ஆடித்திருவிழா, ஆமாங்க, சேலம் கோட்டை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்திருவிழா நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளதால், சேலம் மாநகர பக்தர்கள் ஆன்மீகவாதிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

அதேபோல், சேலம் குகை மாரியம்மன் கோயில், அம்மாப்பேட்டையில் உள்ள செங்குந்தர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் மாநகரில் உள்ள முக்கிய மாரியம்மன் கோயில்களில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றனர்.  

ஆடி 01 முதல் 30 நாட்களுக்கு சேலத்தில் மிக பிரம்மாண்டமாக ஆடித் திருவிழா நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வெளியூர்களில் இருந்தாலும், ஆடித் திருவிழாவிற்காக சொந்த ஊர்களுக்கு வந்து குடும்பத்துடன் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

திருவிழாவின் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படும், சக்தி அழைத்தல், அலகு குத்துதல், பூந்தேர், வண்டிவேடிக்கை உள்ளிட்ட 5 நாட்கள் சேலம் மாநகரமே படுஜோராக இருக்கும்.