ட்ரெண்டிங்

விஜயவாடா- கோட்டயம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு!

 

விஜயவாடா- கோட்டயம் இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இது குறித்து தெற்கு ரயில்வே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் டிசம்பர் 15, 22 மற்றும் ஜனவரி 05 ஆகிய தேதிகளில் விஜயவாடாவில் இருந்து கோட்டயத்திற்கும் (ரயில் எண் 07139) , வரும் டிசம்பர் 17, 24 மற்றும் ஜனவரி 07 ஆகிய தேதிகளில் கோட்டயத்தில் இருந்து விஜயவாடாவிற்கும் (ரயில் எண் 07140) சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

 

கடப்பா, குண்டூரு, ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவுத் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு சேலம் ரயில்வே கோட்டம் மற்றும் தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.