ட்ரெண்டிங்

ஓமலூர் மலைப்பகுதிகளில் அத்திப்பழச் சீசன் தொடக்கம்!

ஓமலூர் மலைப்பகுதிகளில் அத்திப்பழச் சீசன் தொடக்கம்! 

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள மலைப்பகுதிகளில் அத்திப்பழ சீசன் தொடங்கியுள்ளது. பெரியேரிப்பட்டி, வேடப்பட்டி, தும்பிபாடி, டேனிஷ்பேட்டை ஆகிய பகுதிகளில் தித்திக்கும் அத்திப்பழங்கள் கொத்துக் கொத்தாகப் பழுத்துத் தொங்குகின்றனர். அத்திப்பழம் பல்வேறு ரகங்களாகப் பிரிக்கப்பட்டு கிலோ 200 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனைச் செய்யப்படுகிறது. 

அதேநேரம், வனப்பகுதியில் பழுத்துள்ள அத்திப்பழங்கள், பறவைகள் சாப்பிட்டது போக, மீதி அனைத்தும் வீணாகி வருகின்றனர். இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்கள் அத்திப்பழங்களை அறுவடைச் செய்து விற்பனை செய்ய, வனத்துறை அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.