ட்ரெண்டிங்

பெண் அலுவலரிடம் தவறாக நடந்துக் கொண்ட பாதுகாவலர்! 

சேலம் மாவட்டம், ஆத்தூரில் தேர்தல் பணிக்கு வந்த பெண் அலுவலரிடம் தவறாக நடந்துக் கொண்ட இரவு நேர பாதுகாவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் அண்ணா கலையரங்கத்தில், கடந்த ஏப்ரல் 18- ஆம் தேதி அன்று இரவு தேர்தல் அலுவலர்கள் தங்க வைக்கப்பட்டன. அங்கு இரவு நேர பாதுகாவலராக  நியமிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர் ஆறுமுகம் நள்ளிரவில் மதுபோதையில் இருந்துள்ளார். 

பெண்கள் தங்கியிருந்த அறைக்கு சென்ற அவர், கூடுதல் தேர்தல் அலுவலராக வந்த பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்துக் கொண்டுள்ளார். இதனால் அந்த பெண் அலுவலர் கூச்சலிட்டதால், சக அலுவலர்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளித்துள்ளனர்.  

அவரது உத்தரவின் பேரில், தேர்தல் பெண் அலுவலரிடம் தவறாக நடந்துக் கொண்ட இரவு நேர பாதுகாவலர் ஆறுமுகத்தை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி ஆணையாளர்  உத்தரவிட்டுள்ளார்.