ட்ரெண்டிங்

ஈரோடு- மேட்டூர் அணை ரயில் சேவைகள் ரத்து! 

ஈரோடு ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில்நுட்பப் பணிகள் காரணமாக, ஈரோடு- மேட்டூர் அணை ரயில் சேவைகள் இரு மார்க்கத்திலும் ரத்துச் செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. 

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரோடு ரயில் நிலையத்தில் பிட் லைனில் தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருவதால், ஈரோட்டில் இருந்து மேட்டூர் அணை செல்லும் ரயில் சேவையும் (ரயில் எண் 06407), மேட்டூர் அணையில் இருந்து ஈரோடு செல்லும் ரயில் சேவையும் (ரயில் எண் 06408) வரும் நவம்பர் 23- ஆம் தேதி முதல் நவம்பர் 29- ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பயணிகள் தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.