தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 25) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானிய கோரிக்கை அறிவிப்புகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ளார்.
அதில் சேலம் மாவட்டத்திற்கான அறிவிப்புகள் என்னென்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
1. மேட்டூர் உழவர் சந்தை மேம்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படும்.
2. மேட்டூரில் உள்ள அரசு இறைச்சிக் கூடம் மேம்படுத்தப்படும்.
3. ஆத்தூர், எடப்பாடி ஆகிய நகராட்சிகளில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்படும்.
4. பூலாம்பட்டி, வாழப்பாடி ஆகிய பேரூராட்சிகளில் புதிய அலுவலக கட்டடங்கள் கட்டப்படும்.
5. வாழப்பாடி, கருப்பூர், ஜலகண்டாபுரம் ஆகிய பேரூராட்சிகளில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்படும்.
6. கருப்பூர் பேரூராட்சியில் சந்தை புதுப்பிக்கப்படும்.


