ட்ரெண்டிங்

பொங்கல் பண்டிகை- சேலம் வழியாக சிறப்பு ரயில்கள்! 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டும் வரும் ஜனவரி 12, 19 தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கும், மறுமார்க்கத்தில் வரும் ஜனவரி 13, 20 தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. 

இந்த சிறப்பு ரயில்கள், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, மொரப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது.