ட்ரெண்டிங்

செல்போன் சர்வீஸ் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து!

 

சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள செல்போன் சர்வீஸ் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

 

முல்லை நகரைச் சேர்ந்த அன்பு என்பவருக்கு சொந்தமான அந்த கடையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த ஊழியர் உடனடியாக, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், அரைமணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்த போதும், கடையில் இருந்த ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான புது செல்போன்களும், செல்போன் உதிரிபாகங்களும் தீயில் கருகின.

 

தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்து காரணம் என்று காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.