ட்ரெண்டிங்

சேலத்தில் புத்தக திருவிழா தொடங்கியது!

 

சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் அமைக்கப்பட்டுள்ள சேலம் புத்தக திருவிழா-2023-ஐ தமிழக நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். 

 

பின்னர், புத்தகத் திருவிழாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என்.நேரு, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற புத்தகத்தை வெளியிட்டார். 

 

பின்னர், புத்தக அரங்குகளைப் பார்வையிட்டார். இந்த விழாவில், சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், கள்ளக்குறிச்சி எம்.பி. கௌதம சிகாமணி, மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

புத்தகத் திருவிழாவில் 250- க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகளும், கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. 

 

டிசம்பர் 03- ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், காலை 10.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

சேலத்தில் தொடங்கியுள்ள புத்தகத் திருவிழாவால் வாசகர்கள் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.