ட்ரெண்டிங்

குழந்தை விஞ்ஞானிகளாக அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு!

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தேசிய அறிவியல் மாநாட்டிற்கான குழந்தை விஞ்ஞானிகளாக அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

 

காடையாம்பட்டி தாலுக்காவில் உள்ள பெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த 5000- க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் விளையாட்டு மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களை ஆசிரியர்கள் தயார்படுத்தி வருகின்றனர்.

 

இந்த நிலையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் போட்டிகள் நடைபெற்றன. இதில், மாணவர்கள் குருபிரசாத், ஹரி கிருஷ்ணன், சுமித்ரா, புஷ்பா, நேத்ரா, கோகுலவேணி ஆகியோர் அறிவியல் கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர்.

 

மாட்டுச் சாணத்தில் உயிரியல் பங்கு, நெகிழியின் பாதிப்பு ஆகியவை குறித்து அளிக்கப்பட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் தேர்வாகினர். இதையடுத்து, இந்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்திருந்த மாணவர்கள், தேசிய அறிவியல் மாநாட்டிற்கான குழந்தை விஞ்ஞானிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

இவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டு, சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது.