ட்ரெண்டிங்

தி.மு.க. தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்! 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்! 

சேலத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்; மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்; ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்கா, ஜவுளி, வெள்ளி கொலுசு, நார்கயிறு, விவசாயம் ஆகியவற்றிற்காக  ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும். 

வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் ரத்து செய்யப்படும். சிலிண்டர் விலை ரூபாய் 500 விற்பனை செய்யப்படும், பெட்ரோல் ரூபாய் 75, டீசல் ரூபாய் 65 விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; நாடு முழுவதும் உள்ள மகளிருக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும். 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்; திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்; நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும், சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்படும்; நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் உள்ளிட்ட தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.