ட்ரெண்டிங்

"ராஜ்பவன் ஆர்.என்.ரவி எங்கள் அமைச்சரை நீக்க நீ யார்?

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. மற்றும் சேலம் மாநகர சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதில், "ராஜ்பவன் ஆர்.என்.ரவி எங்கள் அமைச்சரை நீக்க நீ யார்?

டெல்லிக்கு செல் வழக்குகளில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர்களை உடனடியாக நீக்கச் சொல்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய அமைச்சர்களின் பெயர், புகைப்படங்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.