ட்ரெண்டிங்

மகனே தாய் தந்தையை அடித்து கொன்ற கொடூரம்..!

 

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே மகனே தாய் தந்தையை அடித்து கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

 

சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட கோனேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி (47) என்பவரின் முதல் மனைவி ஜெயந்திக்கு ஆகாஷ் (23) என்ற மகனும், 2வது மனைவி ஜெயலட்சுமிக்கு கனகவள்ளி என்ற மகளும் உள்ளனர்.

 

இந்த நிலையில் முதல் மனைவியின் மகன் ஆகாசிற்கும் தந்தை பழனிசாமி மற்றும் அவரது சித்தி ஜெயலட்சுமி ஆகியோருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்த நிலையில் கடந்த 16ம் தேதி இரவு முதல் தந்தை மற்றும் சித்தி ஆகிய இருவரும் காணாமல் போய் விட்டதாக ஆகாஷ் நாடக மாடிய நிலையில் உறவினர்கள் ஆகாசை மிரட்டி கேட்ட போது தந்தை சித்தி மீது உள்ள ஆத்திரத்தில் கடந்த 16ம் தேதி இரவு தந்தை பழனிசாமி மற்றும் தனது சித்தி ஜெயலட்சுமி ஆகிய இருவரையும் கை, கால், தலை, என தனித்தனியாக கத்தியால் வெட்டி மூன்று சாக்கு மூட்டைகளில் கட்டி ஏகாபுரம் ஏரியில் ஒரு மூட்டையும், மகுடஞ்சாவடி அருகே உள்ள தாழையூர் வறண்ட ஏரியில் இரண்டு மூட்டைகளையும் வீசி சென்றதாக ஆகாஷ் கூறினார்.

 

இதனையடுத்து உறவினர்கள் மகுடஞ்சாவடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து முதலில் ஆகாஷை கைது செய்து சடலங்களை வீசி சென்றது குறித்து கேட்டறிந்து இரண்டு சடலங்களையும் சம்பவ இடங்களுக்கு செண்டு மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து ஆகாஷிடம் தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.