ட்ரெண்டிங்

சேலம் மண்டலத்தில் ரூபாய் 86.4 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை!

 

தீபாவளி பண்டிகையையொட்டி, டாஸ்மாக் கடைகளில் கடந்த இரண்டு நாட்களில் ரூபாய் 467.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தீபாவளிக்கு முந்தைய தினமான நவம்பர் 11- ஆம் தேதி ரூபாய் 221 கோடிக்கும், நவம்பர் 12- ஆம் தேதி ரூபாய் 246 கோடிக்கும் மதுபான விற்பனை நடைபெற்றுள்ளது.

கடந்த நவம்பர் 11- ஆம் தேதி மதுரை மண்டலத்தில் ரூபாய் 52.73 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூபாய் 48.12 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூபாய் 40.20 கோடிக்கு, திருச்சி மண்டலத்தில் ரூபாய் 40.02 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூபாய் 39.78 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.

அதேபோல், நவம்பர் 12- ஆம் தேதி திருச்சி மண்டலத்தில் ரூபாய் 55.60 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூபாய் 52.98 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூபாய் 51.97 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூபாய் 46.62 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூபாய் 39.61 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.

குறிப்பாக, சேலம் மண்டலத்தில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் ரூபாய் 86.4 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.