ட்ரெண்டிங்

தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்! 

மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்கும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தேர்தல் பொதுப்பார்வையாளர் ஜி.பி. பாட்டீல் இ.ஆ.ப. முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும்,  மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (ஏப்ரல் 10) சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி வருகின்ற ஏப்ரல் 19- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3,260 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில், சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் 1,766 வாக்குச்சாவடிகளும் அடங்கும்.

சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும். 14 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் 82 பதற்றமான வாக்குச்சாவடிகளும், மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 48 பதற்றமான வாக்குச்சாவடிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் 235 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 15 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் 89 பதற்றமான வாக்குச்சாவடிகளும். மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 146 பதற்றமான வாக்குச்சாவடிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள 250 பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க வங்கியாளர்கள், காப்பீட்டு நிறுவனப் பணியாளர்கள் மற்றும் அஞ்சல் துறை அலுவலர்கள் நிலையிலான 300 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கணினி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளில் இத்தேர்தல் நுண் பார்வையாளர்கள் பணிபுரிய உள்ளனர். இவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தேர்தல் பொதுப்பார்வையாளர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

குறிப்பாக. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள், அதனைக் கையாளுதல், சீலிடும் முறை, தேர்தலுக்கு முந்தைய நாள் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள், தேர்தல் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்தல், மாதிரி வாக்குப்பதிவு நடைமுறைகளை கண்காணித்தல் உள்ளிட்டவைகள் குறி நுண் பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

குறிப்பாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள். அதனைக் கையாளுதல், சீலிடும் முறை. தேர்தலுக்கு முந்தைய நாள் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள், தேர்தல் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்தல், மாதிரி வாக்குப்பதிவு நடைமுறைகளை கண்காணித்தல் உள்ளிட்டவைகள் குறித்து நுண் பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு தொடங்கப்பட்ட நேரம் முதல் முடிவுறும் நேரம் வரை வாக்குச்சாவடிகளின் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்து தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி மக்களவைப் பொதுத் தேர்தலை நடத்திடும் வகையில் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 

குறிப்பாக, பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் நுண் பார்வையாளர்கள் வாக்குப்பதிவின்போது விதிமீறல்கள் என அறியப்படும் தகவல்களை உடனடியாக தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் பொது பார்வையாளரின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும், அதுகுறித்த அறிக்கையினை தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக அனுப்பி வைத்திடவும் இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.