ட்ரெண்டிங்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் அறிவிப்பு! 

 

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, சேலம் வழியாக சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது சேலம் ரயில்வே கோட்டம். 

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு வரும் மார்ச் 30- ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கும், மறுமார்க்கத்தில், மார்ச் 31- ஆம் தேதி போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் (06027/06028) இயக்கப்படுகிறது. 

சிறப்பு ரயில்கள், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.