ட்ரெண்டிங்

கும்மி பாட்டு பாடி நடவு பணியில் ஈடுபட்ட பெண்கள்!

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் 25- க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளும், அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

குறிப்பாக, மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், அணைக்கான நீர்வரத்து வினாடி 10,000 கனஅடியாக உள்ளது.

இந்த நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்ததால், விவசாய நிலங்களில் பெண்கள் கும்மிப் பாட்டு பாடி, நடவுப் பணியில் ஈடுபட்டனர். அத்துடன், வயல்வெளிகளில் உள்ள பூச்சி, புழுக்களை உண்பதற்காக பறவை இனங்கள் வயல்வெளியில் அமர்ந்து, மீண்டும் பறந்துச் செல்லும் காட்சி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.