ட்ரெண்டிங்

சாலையில் சென்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்தின் படிக்கட்டு உடைந்து விழுந்தது!

 

சேலத்தில் சென்றுக் கொண்டிருந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான நகர பேருந்தின் படிக்கட்டு திடீரென உடைந்து விழுந்ததால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் ஜங்சன் ரயில் நிலையம் வரை, 13B என்ற எண் கொண்ட நகர பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, பயணிகள் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது, பேருந்தின் படிக்கட்டு உடைந்து விழுந்தது.

 

இதைக் கண்டு பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். ஆனால், நடத்துநரோ படிக்கட்டைப் பேருந்திற்குள் போட்டுவிட்டு, எதுவுமே நடக்காதது போல அங்கிருந்துச் சென்றுவிட்டார்.