ட்ரெண்டிங்

குப்பையில் கொட்டப்பட்ட மலர்கள்: விரக்தியில் விவசாயிகள்!

 

ஓமலூரில் ஐந்து ரூபாய்க்கு கூட விலைப் போகாத டன் கணக்கிலான சாமந்தி மலர்களை விவசாயிகள் குப்பையில் வீசினர்.

 

சேலம் மாவட்டம், ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய சுற்றுவட்டாரத்தில் உள்ள பூசாரிப்பட்டி, தீவட்டிப்பட்டி, மூக்கனூர், கஞ்சநாயக்கன்பட்டி. டேனிஷ்பேட்டை உள்ளிட்ட பல கிராமங்களில் 1,000- க்கும் மேற்பட்ட ஏக்கரில் பல வண்ணங்களில் சாமந்தி மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

 

இங்கு அறுவடைச் செய்யப்படும் மலர்கள், சேலம், பூசாரிப்பட்டி, தொப்பூர், பெங்களூரு, சென்னை உள்ளிட்டப் பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, ஐந்து டன்னுக்கும் அதிகமாக மலர்கள் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதால், ஒரு கிலோ சாமந்தி ஐந்து ரூபாய்க்கு கூட விற்பனையாகாததால், விரக்தியடைந்த விவசாயிகள், மலர்களைக் குப்பையில் கொட்டிச் சென்றனர்.