நாமக்கல் மாவட்டம், வெப்படை பேருந்து நிலையத்தில் ஈரோட்டில் இருந்து சேலம் சென்ற தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறைப் பிடித்தனர்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து வெப்படை செல்லும் பயணிகளை தனியார் பேருந்துகளில் ஏற்றுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகினர். இந்த நிலையில், நேற்று (நவ.05) மாலை சில பயணிகள் ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் செல்லும் தனியார் பேருந்து மூலம் வெப்படைக்கு வர முயன்ற போது, பேருந்தின் நடத்துநர் பயணிகளை ஏற்ற மறுத்துவிட்டார்.
இதையடுத்து, அங்கிருந்த பயணிகள் வெப்படை பகுதி மக்கள் தகவல் தெரிவிக்க, ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்தை சிறைப்பிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் அமைதிக் கூட்டம் நடத்தி தீர்வுக் காணலாம் என சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.



-hcTFAGMRGb.jpg)