ஆன்மிகம்

வேடியப்பன் அம்சாரம்மன் திருக்கோயிலில் கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம்!

 

சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டையை அடுத்த உடையாபட்டி பகுதியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு வேடியப்பன் அம்சாரம்மன் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் புனரமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்த கோயிலில் இன்று (அக்.27) காலை 09.00 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

கோயில் கோபுர கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்களின் கரகோஷத்துடன், புனித நீர் ஊற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, பக்தர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்புப் பணிகளில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். கோயிலுக்கு அருகே ராட்டினம் மற்றும் குழந்தைகள் விளையாடக் கூடிய பாரம்பரிய விளையாட்டுகளும் இடம் பெற்றிருந்தது. இதனால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர்.