ட்ரெண்டிங்

சேலத்தில் தரமற்ற முறையில் கலப்பு உரம் தயாரித்த தனியார் ஆலைக்கு சீல்!

 

தரமற்ற கலப்பு உரம் தயாரித்து விற்பனை செய்ததாக, நெல்லை மாவட்ட விவசாயிகள் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தனியார் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 

சேலம் தனியார் ஆலையில் இருந்து விற்பனை செய்யப்பட்ட உரத்தை நெல்லை மாவட்ட விவசாயிகள் வாங்கிப் பயன்படுத்தியுள்ளனர். அந்த உரமானது, தரமற்ற நிலையிலும், மண் கலந்தும் இருப்பதைக் கண்ட விவசாயிகள், அதனை வீடியோ எடுத்து வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர்.

 

இந்த புகாரை அடுத்து, சென்னை வேளாண்மை ஆணையரக துணை இயக்குநர் மணி மற்றும் சேலம் மாவட்ட வேளாண் உதவி இயக்குநர்கள் ஆகியோர் இணைந்து, சேலத்தில் இயங்கி வந்த கலப்பு உரம் தயாரிக்கும் தனியார் ஆலையை ஆய்வு செய்தனர்.

 

இதில் முறையான ஆவணங்கள் இன்றி, சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாகக் கலப்பு உரம் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வேளாண்மைத்துறை அதிகாரிகள், கலப்பு உரத்தின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.