ட்ரெண்டிங்

தீபாவளியையொட்டி, எர்ணாகுளம்- தன்பாத் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறி

 

தீபாவளியையொட்டி, எர்ணாகுளம்- தன்பாத் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் (ரயில் எண் 06077) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

 

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தீபாவளி பண்டிகையையொட்டி, எர்ணாகுளத்தில் இருந்து தன்பாத்திற்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அதன்படி, நவம்பர் 10- ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் ரயில், நவம்பர் 12- ஆம் தேதி இரவு 11.00 மணிக்கு தன்பாத் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

 

இந்த ரயிலில் 22 பெட்டிகள் இடம் பெற்றிருக்கும். திரிச்சூர்,பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், குண்டூர், விஜயவாடா, ராஜமுந்திரி, விஜயநகரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

 

நவம்பர் 11- ஆம் தேதி காலை 07.22 மணிக்கு சேலம் ரயில் நிலையம் வந்தடையும் சிறப்பு ரயில், மூன்று நிமிடம் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.