சேலம் அருகே இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடியில் இருந்து பூலாம்பட்டி செல்லும் சாலையில் சென்ற சொகுசு கார், பள்ளி மாணவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. விபத்தில் இரண்டு மாணவர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்றொருவர் காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக, அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, தப்பியோடிய கார் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததால், விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. விபத்து குறித்து வழக்குப்பதிவுச் செய்த எடப்பாடி காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


-SXgDfGgJfO.jpg)