ட்ரெண்டிங்

காவல்துறை என்கவுன்ட்டர் செய்ய முற்படுவதாக நீதிபதியிடம் ரவுடி வாக்குமூலம்!

 

பல்வேறு குற்ற வழக்குகளில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த லெனின், சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

 

சட்ட விரோதமாகத் துப்பாக்கி வைத்திருக்கும் வழக்கில், சோமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து, ரவுடி லெனினைத் தேடி வந்தனர். இந்த நிலையில், சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்த அவர், காவல்துறையினர் தன் மீது பொய் வழக்குகளைப் போட்டு என்கவுன்ட்டர் திட்டமிடுவதாக நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

இதையடுத்து, ரவுடி லெனினை ஆறு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடி லெனின் மீது ஏழு கொலை வழக்குகள் உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.