ட்ரெண்டிங்

ஆட்சியரகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., தலைமையில் இன்று (ஆகஸ்ட் 25) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆத்தூர், இளம்பிள்ளை, ஓமலூர், வாழப்பாடி, சங்ககிரி உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் விவசாயிகள் தங்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறினர். அதேபோல், ஒருசில விவசாயிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா இ.ஆ.ப., உதவி ஆட்சியர் சுவாதி ஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம் மற்றும் துறைச் சார்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

முன்னதாக, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கருத்துக்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டார்.