ட்ரெண்டிங்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடனுதவி வழங்கிய ஆட்சியர்!

 

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (பிப்.08) ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியதைத் தொடர்ந்து, சேலம் மாநகராட்சி, தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில்

நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி தலைமையில், மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் முன்னிலையில் 18,216 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூபாய் 96.84 கோடி வங்கிக் கடனுதவி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 

சேலம் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 13,799 குழுக்களும் நகர்ப்புற பகுதிகளில் 7,083 குழுக்களும் ஆக மொத்தம் 2,55,943 மகளிரைக் கொண்ட 20,882 குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களில் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் செய்யப்பட்டு வருகிறது.

 

இதில் நடப்பாண்டான 2023-24-ஆம் ஆண்டிற்கு ரூபாய் 1,124 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, நாளது வரை ரூபாய் 1,109 கோடி கடனுதவிகள் பெறப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக இன்று ரூபாய் 93.55 கோடி வங்கிக் கடனுதவியும், சுழல் நிதி, சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ரூபாய் 3.29 கோடியும் ஆக மொத்தம் ரூபாய் 96.84 கோடி நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் 1,518 குழுக்களைச் சார்ந்த சுமார் 18,216 மகளிர் பயன்பெறுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.