ட்ரெண்டிங்

குள்ளமனிதர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு சேலம் எம்.பி. நித

குள்ளமனிதர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு சேலம் எம்.பி. நிதியுதவி! 

ஜெர்மனி நாட்டில் நடைபெறும் 8-வது உலக அளவிலான குள்ளமனிதர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இன்பத்தமிழ், வெண்ணிலா ஆகிய வீராங்கனைகளுக்கு தலா ரூபாய் 20,000 நிதியுதவியை சேலம் தொகுதியின் மக்களவை உறுப்பினரும், தி.மு.க.வைச் சேர்ந்தவருமான எஸ்.ஆர்.பார்த்திபன் வழங்கினார். 

இது குறித்து எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தனது அதிகாரப்பூர் ஃபேஸ்புக் பக்கத்தில், "குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் தேசிய அளவில் நடைபெற்ற குள்ளமனிதர்களுக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இன்பத்தமிழ்,வெண்ணிலா ஆகிய பெண்களுக்கு ரூபாய் 20,000 நிதியுதவியை  அளித்தேன்.

தற்பொழுது ஆகஸ்டு மாதம் ஜெர்மனி நாட்டில் நடைபெறும் 8- வது உலக அளவிலான குள்ளமனிதர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் இவர்கள் கலந்து கொள்ள தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் அமைச்சரிடம் பரிந்துரைத்து செலவிற்காக இவர்களுக்கு ரூபாய் 5 லட்சத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 

போட்டியில் கலந்து கொள்ள ஜெர்மனி செல்வதையடுத்து, ஜூலை 23- ஆம் தேதி என்னை சந்தித்த சாதனை பெண்மணிகளுக்கு பல்வேறு சாதனைகளை புரிய வாழ்த்துக்களை தெரிவித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.