ட்ரெண்டிங்

சேலம் தாதகாப்பட்டியில் பகுதியில் சுற்றித்திரிந்த சிறுவன் காவல்துறையினர் மீட்டு விசாரணை..!

 

 

சேலம், ஆக. 25: சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகர் பகுதியில் இன்று காலை சுற்றித்திரிந்த 3 வயது சிறுவனை போலீஸார் மீட்டுள்ளனர். 

 

தாதகாப்பட்டி சண்முகா நகரில் திங்கள்கிழமை காலை சுமார் 3 வயது சிறுவன் அங்கும், இங்கும் சுற்றித் திரிந்துள்ளான். இதனை பார்த்த அப்பகுதி மக்கள், சிறுவனிடம் விசாரித்துள்ளார். அப்போது, சிறுவன் சரியாக பேசாததால், சந்தேகமடைந்த மக்கள், அன்னதானப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த போலீஸார், சிறுவனை மீட்டு காவல்நி லையம் அழைத்து சென்று விசாரித்தனர். 

 

அப்போது சிறுவன் ஹிந்தியில் பேசி உள்ளான். இதனால் அவன் வடமாநிலத்தை சேர்ந்தவனாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. 

 

தொடர்ந்து, அந்த சிறுவனின் பெற்றோர் யார்? பெற்றோருடன் வந்த போது வழிதவறி இந்த பகுதிக்கு வந்துவிட்டானா? அல்லது யாரேனும் இந்த பகுதியில் விட்டு சென்றனரா ? சண்முகா நகருக்குள் சிறுவன் எவ்வாறு வந்தான் என விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.