தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளி மாணவர்கள் முதல் பட்டமேற்படிப்பு வரை பயிலும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கான ஊக்கத்தொகை பெறும் தொழிலாளர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தொழிலாளர்களின் மாத சம்பளம் 25,000 ரூபாய் இருக்க வேண்டும். தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 31- ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.


-SXgDfGgJfO.jpg)