தொழில் வரியை உயர்த்தி சேலம் மாநகராட்சி அறிவிப்பு!
சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள மாமன்றக் கூட்ட அரங்கில், இன்று (ஜூலை 25) காலை 11.00 மணிக்கு மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் மாமன்ற இயல்புக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், தொழில் வரி இனங்கள் சுமார் 50% உயர்த்தி சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். இதனைக் கண்டித்து, அ.தி.மு.க.வின் எதிர்க்கட்சித் தலைவர் யாதவ மூர்த்தி தலைமையிலான அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
இதன் காரணமாக, மாமன்றக் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், மாமன்றக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த மாமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திர மதிப்பூதியம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில், மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் இ.ஆ.ப. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



-SXgDfGgJfO.jpg)