சேலம் மாவட்டம், ஆத்தூரில் லியோ திரைப்படத்தை வெளியிடாத கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
ஆத்தூரில் உள்ள நான்கு திரையரங்குகளிலும் லியோ திரைப்படம் வெளியாகவிருந்த நிலையில், ரசிகர்கள் இரவில் இருந்தே கொண்டாட்டத்தைத் தொடங்கினர். ஆனால், திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகர்ஸ்தர்களுக்கும் இடையே பங்கு சதவிகிதத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அதனால் லியோ திரைப்படம் இன்று (அக்.19) திரையிடப்படாது என திரையரங்குகள் அறிவித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள், திரையரங்க ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திரையரங்க கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன.
தகவலறிந்து வந்த காவல்துறையினர், ரசிகர்களை சமாதானப்படுத்தி, திருப்பி அனுப்பினர்.


-SXgDfGgJfO.jpg)