சேலம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு குறித்து காவல்துறை மற்றும் அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (ஜூன் 24) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப்பின், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, சேலம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை. காவல் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்றைய தினம் நடத்தப்பட்டது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் போதைப்பொருட்கள், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள். சட்டவிரோத போலி மதுபானங்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு 0427- 2452202, 0427-1077 என்ற தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் மேற்குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்களை விளம்பரப்படுத்தும் வகையிலும். இதுகுறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேலும் அதிகளவில் மேற்கொள்ள வேண்டுமென தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப. மாநகர காவல் துணை ஆணையர் எஸ்.பிருந்தா இ.கா.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், உதவி ஆணையர் (கலால்) மாறன், வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.



-SXgDfGgJfO.jpg)